இஸ்லாமிய அரசு அமைப்பு போன்ற தீவிரவாதிகளால் நாடு மிரட்டலை எதிர்நோக்குவதாகச் சொல்வது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைத் திரும்பவும் கொண்டுவர அரங்கேற்றப்படும் “நாடகமல்ல” என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார்.
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இதை நம்ப மறுக்கிறார்களே என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
“நம்மில் சிலர், இதில் எம்பிகளும் அடக்கம், ஐஎஸ் மிரட்டல் உண்மையானது என்பதை நம்ப மறுக்கிறார்கள்.
“அவர்கள் இதை அரசாங்கம் நடத்தும் நாடகம் என்கிறார்கள். எனவே, எதிரணி, ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்பிகள் எங்களின் (ஐஎஸ் மீதான) விளக்கக்கூட்டத்துக்கு வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்”, என்றாரவர். கோலாலும்பூரில் அரச மலேசிய போலீஸ் கல்லூரியில் குற்றவியல் விவகாரங்கள் மீதான கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் காலிட் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஐஎஸ் மிரட்டல் என்று கூறி அரசாங்கம் ஐஎஸ்ஏ-யைத் திரும்பக் கொண்டுவரப் பார்க்கிறது என்று டிஏபி எம்பி லிம் லிப் எங் கூறியிருப்பதை ஐஜிபி மறுத்தார்.
“ஐஎஸ் மிரட்டல் உண்மையானது என்பதை நம்ப மறுக்கிறார்கள்” நாங்க உங்களையே நம்பள அப்புறம் ஐஎஸ் – ஐ எப்படி நம்பறது? போலீஸ் படைத் தலைவர் புதிதாக ஒரு புரளியை கிளப்பி விடுகின்றார் என்று இவர்மேல யாரவது ஒரு போலிஸ் ரிப்போர்ட் செய்ய முடியுமா? அப்பத்தான் இந்த நாட்டில் நிம்மதியா தூங்க முடியும். இவனுங்களே எல்லாவற்றையும் கிளப்பி விட்டுட்டு, அதற்குத் தகுந்த மாதிரி தாளம் போடறது.
இது இஸ்லாம் நாடு அல்ல என்று அறிவிப்பது தானே.நாராயண நாராயண
மிரட்டினால் என்ன பயமா!!! இவர்கள் அழிவு அரபாம் ஆகி விட்டதது
இதெல்லாம் நேரத்திற்கு நேரம் பேசும் வெட்டிப்பேச்சு. கையால் ஆகாத கபோதிகள்.