நிபந்தனைகள் மீறப்பட்டால் ஜோகூரால் பிரிந்து செல்ல முடியும்-பட்டத்திளவரசர்

tunkuஜோகூர் பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான்  இப்ராகிமைப்  பொருத்தவரை  எப்போதும்  ஜோகூருக்குத்தான்  முன்னுரிமை. அதனால்  சமூக வலைத்தளங்களில்  அவருடைய  செய்திகள்  ஏற்படும்  தாக்கத்தைப்  பற்றி  அவர்  கவலைப்படுவதில்லை.

“நான்  மாநிலத்தின்  அடுத்த  சுல்தான். அந்த வகையில்  என்னுடைய  மிகப்   பெரிய  பொறுப்பு  ஜோகூர்  மக்களுக்குத்தான். மலேசியா  எனக்கு  முக்கியம்தான். ஆனால்,  ஜோகூருக்கும்  ஜேடிடி(மாநில கால்பந்துக் குழு)க்கும்தான்  முதலிடம்”, என்றாரவர். .Fourth Officialஎன்ற  விளையாட்டு  இதழுக்கு  வழங்கிய  நேர்காணலில்  துங்கு  இஸ்மாயில்  இவ்வாறு  கூறினார். அந்த  நேர்காணல்  அப்படியே  சதர்ன்  டைகர்ஸ்  முகநூல்  பக்கத்தில்  பதிவேற்றம்  செய்யப்பட்டிருந்தது.

ஜோகூர், மலாயாக்  கூட்டரசு  இரண்டுமே பல்வேறு  அடிப்படை  நிபந்தனைகளுக்கு  ஒப்புக்கொண்ட பின்னரே ஜோகூர்  கூட்டரசில்  சேர்ந்தது. அந்த  நிபந்தனைகளில்  ஏதாவது ஒன்று  மீறப்பட்டாலும்  நாட்டிலிருந்து  பிரிந்து  செல்லும்  உரிமை  எங்களுக்கு  உண்டு”, என்றாரவர்.