ஜாரிங்கான் மலாயு மலேசியா என்ற என்ஜிஓ ஒன்று பேங்க் நெகாரா கவர்னர் ஸெட்டி அக்டார் அசீஸ் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலிக்குக் “குழிபறிக்கிறார்” எனப் போலீசில் புகார் செய்துள்ளது.
அதன் தலைமைச் செயலாளர் ஹம்டான் முகம்மட் சாலே 1எம்டிபிக்கு வழங்கப்பட்ட மூன்று அனுமதிகள் இரத்துச் செய்யப்பட்டதற்கு ஸெட்டியே பொறுப்பு என்றார்.
டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அது சட்டத்துறைத் தலைவரின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தவும் அவருக்குக் குழிபறிக்கவும் பேங்க் நெகாரா தீய நோக்கம் கொண்டிருந்ததைக் காண்பிக்கிறது”, என்றார்.
அப்பன் ஆண்டிக்கு என்னமா நாட்டியம் ஆடுகின்றார்கள் இந்த ஆண்டிகள்.
ஆணவத்தின் அறியாமைக்கு மொத்த இலக்கணமாக இருப்பவர்கள் இவர்கள்தான்.
எல்லாம் பிரதமனின் பில்லியன் பேசுகிறது– மட ராணுவ ஈன ஜென்மங்கள் செய்தது ஏன்?
எல்லா கேடு கெட்ட ஜென்மங்களையும் தூண்டி விட்டு குளிர் காய்கிரான்- வளர்ந்த நாடுகளில் 2 முறை தான் அதிகாரத்தில் இருக்க முடியும்- அனால் இங்கு ? 58 ஆண்டு தில்லு முள்ளு எப்போது முடிவுக்கு வரும்?