எம்பி: செராஸ் நெடுஞ்சாலையை வாங்கினால் டோல் உயர்வுக்கு அவசியமிருக்காது

teoசாலைக்  கட்டண  உயர்வைத்  தவிர்க்க  சாலைப்  பராமரிப்பு  நிறுவனங்களுக்கு  இழப்பீடு  கொடுப்பதற்குப்  பதிலாக  அந்த  நிறுவனங்கள்  சிலவற்றை  விலைக்கு  வாங்குவது பற்றி  அரசாங்கம்  ஆலோசிக்க  வேண்டும்.

சாலைக் கட்டண உயர்வு  பற்றிக்  கருத்துரைத்த  கூலாய்  எம்பி  தியோ  நை  சிங்  இதனைத்  தெரிவித்தார். செராஸ்- காஜாங்  11.5 கிலோ  மீட்டர்  நெடுஞ்சாலையை  அவர்  ஓர்  உதாரணமாகக்  குறிப்பிட்டார்.

“சாலைக்  கட்டண உயர்வுக்கு  அனுமதிக்காமல்,  அரசாங்கம்  அங்கு  சாலைப்  பராமரிப்புக்  குத்தகையைப்  பெற்றுள்ள  செரா  சமா சென்.  பெர்ஹாட்டை  வாங்கி  விடலாம்”, என  தியோ  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

அரசாங்கத்துக்கு  அந்நிறுவனத்தில்  ஏற்கனவே  49 விழுக்காட்டுப்  பங்குள்ளது. எங்சியுள்ள  51 விழுக்காட்டையும்  வாங்கி  விடலாம். அதற்கு ஏறத்தாழ ரிம120 மில்லியன்  கொடுக்க  வேண்டியிருக்கும்.

“ரிம120 மில்லியன் சிறிய  தொகை  அல்லதான்.  ஆனால், சாலைப்  பராமரிப்பாளருக்கு  அரசாங்கம்  கொடுக்கும்  இழப்பீட்டுடன்  ஒப்பிட்டால்  அது  பெரிதல்ல”, என்றாரவர்.