அரசாங்கத்துக்கு மலாய்க்காரர் ஆதரவு பெரிய அளவில் சரிவு

syபிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  அரசாங்கம்  முதல்  முறையாக  பெரும்பான்மை  மலாய்க்காரர்  ஆதரவை இழந்திருப்பதைக்  கருத்துக்  கணிப்பு  ஒன்று  காட்டுகிறது.

மலாய்க்கார  வாக்காளர்களில்  31  விழுக்காட்டினர்  மட்டுமே  அரசாங்கத்தின்மீது  திருப்தி  கொண்டிருப்பது  மெர்டேகா  மையம்  நடத்திய  கருத்துக்கணிப்பில்  தெரிய  வந்திருப்பதாக  சிங்கப்பூரின்  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  கூறிற்று.

2012-க்குப்  பிறகு  மலாய்க்காரரிடையே  அரசாங்கத்துக்கான  ஆதரவு  50 விழுக்காட்டும்  கீழே  சரிவு  கண்டது  இதுவே முதல்  முறையாகும்.

இது  படுமோசமான  சரிவுதான்.  ஏனென்றால்  ஜனவரியில்  ஆதரவு  52 விழுக்காடாக இருந்தது.