இணையம் குறைவான வேகம் கொண்டிருப்பதையும் கட்டுப்படியாக இருப்பதையுமே மலேசியர்கள் விரும்புகிறார்கள் எனக் கூறி அதற்காகக் கண்டனங்களுக்கு ஆளானவர் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக். இப்போது அவர் இணையத்தை மேம்படுத்த வழிவகை காணும்படி தம் அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
“அமைச்சுக்கு கட்டமைப்பை மேம்படுத்துவதற்குச் சிறப்பு கவனம் செலுத்தி இணையத் தொடர்பை நாடு முழுக்க விரிவுபடுத்த வேண்டும் எனப் பணித்திருக்கிறேன்”, என்றாரவர்.
கட்டமைப்பை மேம்படுத்தினால் அதிக செலவின்றி வேகத்தைக் கூட்டலாம்.
“அமைச்சு இதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருகிறது”, என சாலே தம் வலைப்பதிவில் கூறினார்.
என்னமோ நடக்குது! என்னான்னு புரியலை!
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் விரைவில் இணைய வேகம் அதிகரிக்கப்பட்டு இணைய கட்டணம் குறைக்கப்படும் என்று சொன்னவன் தானே? மலேசியர்கள் அனைவருக்கும் ஞாபக மறதி அதிகம் என்று எண்ணம் போல்..?