சீனர்கள் “வந்தேறிகள்” அல்ல, நஜிப் கெராக்கானிடம் கூறுகிறார்

 

moreஇந்நாட்டின் மேற்பாட்டிற்கு பங்களிப்புச் செய்த மலேசிய சீனர்கள் “வந்தேறிகள்” அல்ல. அவர்கள் மலேசியாவின் மைந்தர்கள் என்று பிரதமர் நஜிப் இன்று ஷா அலாமில் கெராக்கான் கட்சியின் 44 ஆவது தேசிய பேராளர்கள் மாநாட்டில் பேசிய போது கூறினார்.

இந்நாட்டின் மலைக்க வைக்கின்ற வளர்ச்சியில் சீன சமூகமும் அதன் பங்கை ஆற்றியுள்ளது என்றும் அவர் கூறினார்.

“அதனால்தான் நீங்கள் “வந்தேறிகள்” அல்ல. நீங்கள் மலேசியாவின் மைந்தர்கள். நீங்கள் இங்கு பிறந்தவர்கள், இங்கு வளர்ந்தவர்கள். காலப் போக்கில் நீங்கள் மரணமடையும் போது இங்குதான் அடக்கம் செய்யப்படுவீர்.

“அதுதான் உண்மை. நாம் இங்கு மலேசியர்களாக இருக்கிறோம்”, என்று அம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ள 1,618 பேராளர்களின் கைத்தட்டலுக்கிடையில் நஜிப் மேலும் கூறினார்.

இந்நாட்டில் சீனமொழிக் கல்வி தொடர்ந்து இருக்கும். அது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்று கூறிய நஜிப், சீனாhapuskansjkc மற்றும் தைவானை அடுத்து சீன மொழியை வளர்ச்சியடைய அனுமதிக்கும் ஒரே நாடு மலேசியா மட்டுமே என்றார்.

தாய்மொழிப்பள்ளிகள் இருந்த போதிலும், அனைத்து இன மலேசியர்களிடமும் ஒற்றுமை உணர்வு இருக்க வேண்டும் என்பதோடு நாம் அனைவரும் ஒன்றாக தேசிய ஒற்றுமைக்காக உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மலேசியாவின் எதிர்காலம் சமுதாய ஒப்பந்தம் மற்றும் பெடரல் அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பதை உறுதிப்படுத்தப் போவதாகவும் நஜிப் கூறினார்.

மலேசியா மிதவாத கோட்பாட்டின் அடிப்படையில் தொடர்ந்து ஒரு பல்லின, பலசமய மற்றும் பலகலாச்சார சமுதாயமாக இருக்கும். அதுதான் பாரிசானின் கொள்கை என்று நஜிப் மேலும் கூறினார்.