பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் கடைசியாக வருவது வழக்கமான ஒன்றுதான் என்று கூறிய பிரதமர் துறை அமைச்சர் அஸலினா ஒத்மானை பிகேஆர் எம்பி ஒருவர் சாடினார்.
நாடாளுமன்ற வழக்கப்படி பார்த்தால், அத்தீர்மானத்துக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீபன் சிம் கூறினார்.
“ஏனென்றால் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதுதான் அரசாங்கத்துக்குச் சட்டத் தகுதியைக் கொடுக்கிறது”, என சிம் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தப்பு என்று சொல்லித் தப்பிப்பது தப்பில்லையே!
மக்களுக்காக வாதமா,அதிகாரத்துக்காக வேஷமா,நாராயண நாராயண.