சூடான விவாதங்களுடன் இன்று நாடாளுமன்றம் தொடங்கியது. தொடங்கிய வேகத்தில் இரண்டு டிஏபி எம்பிகள் அவைநீக்கம் செய்யப்பட்டனர்.
முதலில் வெளியேற்றப்பட்டவர் லிம் லிப் எங் (டிஏபி- செகாம்புட்). நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது டோல் கட்டண உயர்வுமீது தாம் தாக்கல் செய்த அவசரத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது ஏன் என்றவர் வினவினார். உடனே, கூட்டத்தில் குறுக்கீடு செய்தததற்காக அவையிலிருந்து வெளியேறுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.
லிம்மைத் தற்காத்துப் பேசினார் கோபிந்த் சிங் டியோ. அதற்காக அவரையும் அவையிலிருந்து வெளியேற்றினார் அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா.
வெளியேற்று வெளியேற்று. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடாரம் காலியானப் பிறகு அனைத்து தீர்மானங்களையும் எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளலாம்.
நாளை கோர்டில் கேஸ் இருந்திருக்கும்,நாராயண நாராயண,
பண்டிகார் என்ன பண்டி தின்னுரவரா ??