டிஏபி: நம்பிக்கையில்லாத் தீர்மானம் கோலி விளையாட்டல்ல

guanபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிரான  நம்பிக்கையில்லாத் தீர்மானம்  தொடர்பில்  எதிரணி  பிளவு பட்டிருப்பது  தெரிய வந்துள்ளது.

தீர்மானத்தைத்  தாக்கல்  செய்த  பிகேஆர்  நாடாளுமன்ற   உறுப்பினர்  ஹீ  லோய்  சியானிடம்  அதைத்  திரும்பப்  பெற்றுக்கொள்ளுமாறு    டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்  கூறியதிலிருந்து  இது  தெரிய  வருகிறது.

ஆனால், பிகேஆரின்  பத்து  எம்பி  தியான்  சுவா, ஹீயைத்  தற்காத்தார். தீர்மானம்  கொண்டுவர  அவருக்கு  உரிமை  இருக்கிறது  என்றார்.

பின்னர்,  லிம்மை  நாடாளுமன்ற  வளாகத்தில்  சந்தித்து  இது  பற்றி  வினவியதற்கு  அது  தேசிய  முக்கியத்துவம்  வாய்ந்த  தீர்மானம்  என்றும் அதை  எதிரணித்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  தாக்கல்  செய்வதே  பொருத்தமாகும்  என்றார்.

“இது  ஒன்றும்  கோலி  விளையாட்டல்ல.

“தீர்மானத்தின்  முக்கியத்துவத்தைக்  குறைக்க  நினைத்தால் ‘கோலி  விளையாடுங்கள்’. தாராளமாக  ஆடுங்கள்”, என்றார். ஆனால்,  அதில்  டிஏபி  கலந்துகொள்ளாது  என்றாரவர்.