நாடாளுமன்றம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எஸ்ஆர்சி இண்டர்நேசனலுடன் தொடர்புள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து ரிம42 மில்லியன் பெற்றாரா என்ற கேள்வியைத் தள்ளுபடி செய்தது.
வால் ஸ்திரிட் ஜர்னலில் வெளிவந்த செய்தியை அடிப்படையாக வைத்து கூய் ஹிஸியாவ்- லியோங் அக்கேள்வியைக் கேட்டிருந்தார். பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையாகக் கொண்ட கேள்விகளுக்கு மக்களவையில் இடமில்லை என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
நஜிப்மீது விசாரணை நடைபெறுவதாகக் கூறும் செய்தி தொடர்பில் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அமெரிக்க நீதித் துறையைத் தொடர்புகொண்டு பேசியதா என்ற அவரது இன்னொரு கேள்வியையும் நாடாளுமன்றம் நிராகரித்தது.
ஏம்பா நாட்டிற்கு முக்கியமில்லாத கேள்விகளை எல்லாம் கேட்டு நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கின்றீர்கள்!. நாடாளுமன்றத்திற்கு முக்கியமான கேள்விகளை கொஞ்சம் அடுக்கு மொழியில் எடுத்து வையுங்கள் ‘ஐய்யயோ 1 மலேசியா’.
நாடாளுமன்றம் நிராகரிக்கலாம் ஆனால் மக்கள் மன்றம் நிராகரிக்காது!
“நஜிப்பை பத்திரமாக வெளியேற்றி நாட்டை அழிவிலிருந்து காக்க போகிறீர்களா ?” அல்லது “நஜிப்பை கைது செய்து நாட்டை அழிவிற்கு இட்டு செல்ல போகிறீர்களா ?” என்று மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் கேட்டு விட்டார். இவருடைய கேள்வியின் “உள் அர்த்தங்களை புரிந்து” கொள்ளாமல் ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் “கண்ணாமூச்சி” விளையாடி கொண்டிருக்கிறார்கள்.
அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்,வாழ்க நாராயண நாமம்.