அம்பாங் பார்க் கடைக்காரர்கள் 100-க்கு மேற்பட்டவர்கள் அந்த வர்த்தக மையத்தை உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் “வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக மையத்தை உடைக்காதீர்”, “அம்பாங் பார்க்கைக் காப்பாற்றுங்கள்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன். “அம்பாங் பார்க் வாழ்க” என்றும் முழக்கமிட்டனர்.
நாட்டின் பழைமையான வர்த்தக மையங்களில் ஒன்றான அம்பாங் பார்க், எம்ஆர்டி நிலையம் கட்டப்படுவதற்காக உடைக்கப்படுகிறது.
அங்குள்ள 250 கடைக்காரர்களுக்கு இரண்டு விருப்பத் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் அங்கிருந்து நிரந்தரமாக வெளியேறலாம் அல்லது இப்போது வெளியேறி அம்ஆர்டி நிலத்தடி நிலையம் கட்டி முடிக்கப்பட்டதும் திரும்பி வரலாம்.
செம்பருத்தியில் நம்மவர் விவகாரத்தை மட்டும் அலசினால்,நம்மவர்க்கு பயனாக அமையும்.இது என் சொந்த அபிபிராயம்,அதாவது பயனிடார் சங்கம் வழிகாட்டி,போன்றவை வாழ்க நாராயண நாமம்.
நம்மவர் விவகாரம் என்று குண்டு சட்டியில் குதுரை ஒட்டுவதால் தான் தமிழன் இன்னும் உருப்படாமல் இருக்கிறான் !!!
வுண்மையை பகிர்வதற்கு துணிவு வேண்டும்,வாழ்த்துக்கள் நாராயண நாராயண.