ரிம2.6 பில்லியன் பற்றிய கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கப்படும்

answerஅரசாங்கம்  பிரதமரிடம்  கொடுக்கப்பட்ட  ரிம2.6 பில்லியன்  நன்கொடை  பற்றியும்  அது  தொடர்பான  மற்ற  கேள்விகளுக்கும்  நடப்பு  நாடாளுமன்றக்  கூட்டத்தில்  பதில்  அளிக்கும்.

1எம்டிபி-இலிருந்து  இண்டர்நேசனல்  பெட்ரோலியம்  இன்வெஸ்ட்மெண்ட்  நிறுவன (ஐபிஐசி)த்துக்கு அனுப்பப்பட்டு  காணாமல்போனதாகக்  கூறப்படும்  யுஎஸ்$993 மில்லியன்  பற்றிய  கேள்விகளுக்கும் அரசாங்கம்  பதிலளிக்கும்.

எப்போது என்பது  பின்னர் ஒரு  நாளில்  தீர்மானிக்கப்படும்  என்று  பிரதமர்  துறை  அமைச்சர்  அஸலினா  ஒஸ்மான்  கூறினார்.

“இந்தக்  கேள்விக்கும்  இதே  போன்ற  கேள்விகளுக்கும்  இந்த  நாடாளுமன்றக்  கூட்டத்திலேயே  பின்னர் தீர்மானிக்கப்படும்  ஒரு  நாளில் பதில்  கூறப்படும்”, என்றாரவர்.