‘பேரணி பற்றி வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகள் சுற்றுலாவுக்கு நல்ல விளம்பரமாக அமைந்தன’

nazriசுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ், பெர்சே 4 பேரணி,  செப்டம்பர்  16 சிகப்புச்  சட்டைப்  பேரணி  ஆகியவை  பற்றி  செய்தி  வெளியிட்ட  வெளிநாட்டு  ஊடகங்களுக்கு  நன்றி  தெரிவித்தார். அச்செய்திகளால்  சுற்றுலா  விளம்பரங்களுக்குச்  செலவிடும்  பணம்  மிச்சமானது.

“ஒவ்வொரு  மணி  நேரத்துக்கும்  பெர்சே  பேரணி  பற்றிய  செய்திகளை  இரண்டு  நாள்களுக்குத்  தொடர்ந்து  ஒளிபரப்பிய  சிஎன்என்,  அல் ஜசீரா, பிபிசி  ஆகியவற்றுக்கு  நன்றி.

“பிரதமரை  எதிர்க்கும்   நோக்கம்தான்  அவற்றுக்கு. ஆனால், நமக்கு பில்லியன் ரிங்கிட்  பெறும்  விளம்பரம்  இலவசமாகக்  கிடைத்தது”, என நஸ்ரி  நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார்.

பதவியில்  உள்ள  பிரதமருக்கு  எதிராக  ஆர்ப்பாட்டம்  செய்தார்கள்  என்றாலும்  பெர்சே  பேரணி  நடத்த  அரசாங்கம்  அனுமதித்தது. இது  நாட்டில்  ஜனநாயகம்  பின்பற்றப்படுவதைக்  காண்பிக்கிறது.

“ஆரோக்கிமான  பேரணிகளை  நடத்தியே  விளம்பரத்துக்காக  செலவாகும்  பில்லியன்களை  மிச்சப்படுத்தலாம்போல்  தெரிகிறது”, என்று  அவர் கூற  ஆளும்  கட்சி  எம்பிகள் ஆரவாரம்  செய்து  அதை  வரவேற்றனர்.