கார் விலைகளைக் குறைக்கும் புத்ரா ஜெயாவின் கொள்கை, விலைகள் உயர்ந்ததால் தோற்றுப் போனதால் அதைத் தூக்கி எறிய வேண்டும் என்று பிகேஆர் இளைஞர் தலைவர் நிக் நஸ்மி நிக் மாட் கூறினார்.
பிஎன் அதன் 2013 தேர்தல் அறிக்கையில் காரின் விலைகள் 20-இலிருந்து 30 விழுக்காடுவரை குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது.
மிக அதிகமாகவுள்ள வரிகளைக் குறைத்து காரின் விலைகள் படிப்படியாகக் குறைப்பது எதிரணியினரின் கொள்கை. பிஎன்னோ “சந்தை நிலவரங்களை” வைத்து விலைகளைக் குறைக்கப்போவதாகக் கூறிற்று.
“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அரசாங்கம் அதன் கொள்கை தோற்றுப்போனதை ஒப்புக்கொண்டு கார் விலைகளைக் குறைக்கும் எங்கள் கொள்கையைச் செயல்படுத்த வேண்டும்”, என நிக் நஸ்மி ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.
அட நீங்கள் எல்லாம் இப்படியே மாத்தி-காத்தி பேசிகிட்டிருந்க, டேல் ஏறர வேகத்துல மக்கள் மாட்டி வண்டியை திரும்ப ரோட்ல விட போறாங்க. மாட்டுவண்டி வைச்சிருக்கிற மகா ராஜாக்களா , வாங்கல ஒரு நாளைக்கு டோல் ரோட்டுல விடுவோம். எவன் டோல் கேக்கிறான் பார்ப்போம்.