நம்பிக்கையில்லா தீர்மானம் இப்போதைக்கு இல்லை

motionநடப்பு  நாடாளுமன்றக்  கூட்டம்,  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்குக்கு  எதிராக  எதிரணித்  தலைவர்  டாக்டர்  வான் அசிசா  வான்  இஸ்மாயில்  கொண்டுவரும்  நம்பிக்கையில்லா  தீர்மானத்தை  ஏற்று  விவாதம் நடத்துவது சந்தேகமே.

ஏனென்றால், அப்படிப்பட்ட  தீர்மானம்   நாடாளுமன்றக்  கூட்டம்  தொடங்குவதற்கு  14  நாள்களுக்கு  முன்னரே  சமர்ப்பிக்கப்பட்டிருக்க  வேண்டும்  என  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  இன்று கூறினார்.

நிலை  ஆணை  பகுதி 26  அல்லது  27-இன்கீழ்  ஒரு  தீர்மானத்தைப்  பதிவு  செய்வதாக  இருந்தால்  புதிய  நாடாளுமன்றக்  கூட்டத்தொடர்  தொடங்குவதற்கு  14- நாள்களுக்கு  முன்னதாக அதைச்  செய்ய  வேண்டும்  என்றாரவர்.

எனவே, வான்  அசிசா  நம்பிக்கையில்லா  தீர்மானத்தை அடுத்த  நாடாளுமன்றக்  கூட்டத்தில்தான்  தாக்கல்  செய்ய  முடியும்  என்றவர்  விளக்கினார்.

நஜிப்புக்கு  எதிரான  நம்பிகையில்லா  தீர்மானம் இவ்வாரம்  தாக்கல்  செய்யப்படும்  என  வான்  அசிசா  கூறியதாக பக்கத்தான்   ஹராபான்  நேற்று  அறிக்கை  வெளியிட்டிருப்பது  பற்றிக்  கருத்துரைத்தபோது பண்டிகார்  இவ்வாறு  கூறினார்.