பொதுக் கணக்குக்குழுவின் புதிய தலைவர் ஹ்சான் அரிப்பின் அக்குழுவுக்கு டிஏபி எம்பி டோனி புவாவை நீக்கும் அதிகாரம் கிடையாது என்றார்.
“பிஏசிக்கு அந்த உரிமை இல்லை”, என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்குமுன் ஹசான், 1எம்டிபி பற்றி புவா தொடர்ந்து குறை சொல்லி வருவதால் அவரது நிலை பற்றி பிஏசி-இன் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
அது பற்றி விளக்கமளித்த அந்த ரொம்பின் எம்பி, புவா எழுப்பிய விவகாரங்கள் மற்றும் அதன் உறுப்பினர்களின் நெறிமுறைகள் பற்றி தனிப்பட்ட முறையில் பிஏசி விவாதிக்கும் என்பதைத்தான் அவ்வாறு கூறியதாகக் குறிப்பிட்டார்.
மேலும் அவரை வினவியதில், அந்த டிஏபி எம்பியை நீக்கும் திட்டம் எதுவும் குழுவுக்கு இல்லை என்றார்.
அடக்கு முறையில் தானே இந்த மடையர்கள் ஆட்சிக்குள் இருக்க முடியும்–திறமையினால் ஒன்றும் புடுங்க முடியாது– எதற்கு எடுத்தாலும் வெளி ஏற்றம் -தடுப்பு -சிறை –
உண்மை திறமை இருதால் அதை காண்பிக்க வேண்டியது தானே– அவ்வளவு திறமை இருந்தால் இந்த நாடு இப்படியா இருக்கும்?
இப்படிச் சொல்லிவிட்டு அப்புறம் நான் அப்படிச் சொல்லவில்லை என்பீர்கள். காது புளித்துவிட்டது!