பெர்சே சாபா தலைவர்மீது பேரணிச் சட்டத்தை மீறியதாகக் குற்றச்சாட்டு

berஅமைதிப் பேரணிச்  சட்ட(பிஏஏ)த்தை  மீறியதாக பெர்சே  சாபாவின்  உதவித்  தலைவர்  ஜைன்னி  லாசிம்பாங்  கோட்டா  கினாபாலு  மெஜிஸ்திரேட்  நீதிமன்றத்தில்  இன்று நிறுத்தப்பட்டார்.

அவர்மீது  ஆகஸ்ட் 29,30-இல் நடைபெற்ற  பெர்சே 4 பேரணி  பற்றி  10-நாள்களுக்கு  முன்னதாகவே  தெரியப்படுத்தத்  தவறிவிட்டதாக குற்றம்  சுமத்தப்பட்டது.

மேல்முறையீட்டு  நீதிமன்றம்,  பிஏஏ-இன்படி  10-நாள்களுக்கு  முன்பே  தெரியப்படுத்த  வேண்டும்  என்பது  சட்டப்படி  சரியானதே  என்று  அறிவித்ததை  அடுத்து   அச்சட்டத்தின்கீழ்  நீதிமன்றத்தில்  குற்றம்  சுமத்தப்பட்ட  முதல்  ஆள்  ஜைன்னிதான்  என்று  பெர்சே  இன்று  ஓர்  அறிக்கையில்  குறிப்பிட்டது.

“மேலும்  பலர்மீது  குற்றம்  சாட்டப்படும்  என  எதிர்பார்க்கிறோம்.  எதிர்ப்பாளர்களிடையே  அச்சத்தை  உண்டுபண்ணுவதுதான்  இதன்  நோக்கம்”, என்று  அது  கூறிற்று.