பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 1எம்டிபிமீதான விசாரணைகள் தடையின்றி நடப்பதற்கு இடமளிக்க வேண்டுமே தவிர ஊடகங்களில் அதன்மீது விசாரணை நடத்துவது தேவையற்றது எனக் கூறினார்.
அவ்விவகாரம்மீது சுயேச்சை விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தாமே சில விசாரணைகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
“ஊடகங்களில் விசாரணை நடத்திக் கொண்டிருக்காமல் இந்த விசாரணைகளின் முடிவுகளுக்காகக் காத்திருப்போம். தவறு நிகழ்ந்திருப்பதாகத் தெரிய வந்தால் அதற்குப் பொறுப்பானர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்”, என்றாரவர்.
போடா டேய். உனக்கு பயம் வந்திருச்சு.
இலஞ்ச ஒழிப்பு இலாக்க விசாரணை வேண்டாம். நாடாளுமன்றத்தில் விசாரணை வேண்டாம், PAC விசாரணையைத் தள்ளிப் போடலாம் என்றால் மக்கள் ஊடக விசாரணையை நம்பித்தான் போக வேண்டும். ஊடக விசாரணை வேண்டாம் என்று “உத்தரவாதம் அளிக்கிறேன்” என்பார் யார்? குற்றம் சாட்டப் பட்டவரே உத்தரவாதம் கொடுக்கின்றார் என்று கூவுவதை மக்கள் நம்ப வேண்டும்.
ஐயோ!!! உலகமே நம்பிவிட்டது!!! மஹா திருட்டுப் பயல்கள் இருக்கும்வரை நாடு உருப்படாது!! தெரு நாய்கள் போல் விரட்டி விரட்டி அடிக்க வேண்டும் இந்த அரசியல் கொள்ளையர்களை!!!!
எல்லாரும் வாயை பொத்திக்கொண்டு இருக்கவேண்டும் –என்னமோ இங்கு நீதி தேவதையின் ஆட்சி இருக்கும் போல். இங்குதான் எவனையும் வாங்க முடியுமே– நீதி தேவதை இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மக்கள் பேசினால் மக்களின் மனதில் ஊறிப்போய் விடுமே என்ற பயம்–தேர்தலின் போது . அவனின் ஊடகம்– உத்துசான் –அந்த நாறிப்போன ஊடகம் உண்மை பேசுகிறது–ஆனால் மற்றவர்கள் பொய் பேசுகின்றனர். இந்த கம்மனாட்டிகள் 58 ஆண்டுகள் கொள்ளை அடித்து ஊழலில் ஊறிப்போன ஜென்மங்கள்.
“1 MALAYSIA DEVELOPMENT BERHAD” என்று முதல் மலேசியாவின் மேம்பாட்டு நிறுவனமாக ஆரம்பித்து, “1 MALAYSIA DEVELOPMENT BANKRAP” என்ற முதல் மலேசியாவின் மேம்பாட்டு திவால் நிறுவனமாக மாறி வெற்றிகரமாக அதன் “மூடுவிழா” லட்சியத்தை நெருங்கி கொண்டிருக்கும் இவ்வேளையில் அரச விசாரணை, சுயேச்சை விசாரணை, ஊடக விசாரணை என்ற அறிக்கைகள் ரொம்ப ஓவருங்க !