இந்தோனேசியாவின் சுமத்ராவிலும் போர்னியோவிலும் தோட்டங்களிலும் காடுகளிலும் கடந்த மூன்று மாதங்களாக பற்றி எரியும் தீ நவம்பர் இறுதிவரை தொடரலாம் என இந்தோனேசிய அதிகாரி ஒருவர் எச்சரித்தார்.
தென்கிழக்காசியாவின் பல பகுதிகளைப் புகைமூட்டத்தில் மூழ்கடித்த நெருப்பை அணைக்க நிலத்திலும் ஆகாயத்திலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை.
“நவம்பரில் மழை பெய்யலாம் என்பது எங்களின் கணிப்பு. ஆனால், எல் நினோ காரணமாக பெரிய மழையை எதிர்பார்ப்பதற்கு இல்லை”, என தேசியப் பேரிடர் மேலாண்மைத் துறை பேச்சாளர் சுதோபோ நுக்ரோஹோ
“நவம்பர் இறுதி வாக்கில் நெருப்பு முற்றாக அணைந்து விடும் என எதிர்பார்க்கிறோம்”, என்றாரவர்
இன்றே மூச்சு விட முடியாமல் தடுமாடுகின்றோம். இன்னும் ஒரு மாதமா?
இந்தோனேசியர்களுக்கு எதைப்பற்றியும் அக்கறை கிடையாது– அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எவ்வளவு மேஜைக்கு அடியில் கிடைக்கும் என்பது முக்கியம் மக்களுக்கு தினசரி வாழ்க்கை முக்கியம் அதிலும் எதைப்பற்றியும் கவலை கிடையாது. ஆனால் அவர்களை பற்றி குறை கூறினாலோ அவ்வளவுதான். இதுதான் மூன்றாம் உலக புத்தி
ரொம்ப சந்தோஷம்! பள்ளிக்கூடம் மட்டும் தானா லீவு? எல்லாவற்றுக்கும் லீவு கொடுங்களேன்!
அரசாங்கம் இரண்டு வாரங்கள் பொது விடுமுறை அறிவித்தால் மகிழ்ச்சியாக இருக்கும் .
தீ எரியும் இடங்களில் உள்ள காவல் மற்றும் இதர அதிகாரிகள் என்ன பிடுங்கி கொண்டிருக்கின்றனர்? எல்லாம் கை யூட்டுதான் வேறு என்ன?
இந்த தீ தென் கிழக்கு ஆசியாவையே புகை மூட்டத்தில் மூழ்கடித்து விட்டது.பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தோனேசியா நஷ்ட ஈடு வழங்கும்படி சர்வதேச நீதிமன்றத்தில் மலேசியா வழக்கு தொடர வேண்டும்.