அரசின் முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி, 2014ஆம் ஆண்டுக்கான அதன் நிதி அறிக்கையில் திருத்தங்கள் எதையும் செய்யவில்லை என நிதி அமைச்சு கூறியது.
1எம்டிபி, தணிக்கை செய்யப்பட்ட அதன் நிதி அறிக்கையைத் திருத்தி இருந்ததா என்று வினவிய டோனி புவா(டிஏபி- பெட்டாலிங் ஜெயா உத்தாரா)வுக்கு கொடுத்த எழுத்துப்பூர்வமான பதிலில் நிதி அமைச்சு இவ்வாறு தெரிவித்தது.
1எம்டிபி மலேசிய நிறுவனங்கள் ஆணைய(சிசிஎம்)த்திடம் முதலில் தாக்கல் செய்த கணக்கறிக்கை இரண்டாவதாக தாக்கல் செய்த அறிக்கையினின்றும் வேறுபட்டிருந்ததா என்பதை புவா தெரிந்து கொள்ள விரும்பினார்.
“1எம்டிபி 2014 மார்ச் 31-உடன் முடிந்த ஆண்டுகாக ஒரே ஓர் அறிக்கையைத்தான் திருத்தங்கள் ஏதுமின்றி தாக்கல் செய்தது”, என அமைச்சு கூறியது.
இன்னொரு நிலவரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்தின் இயக்குனர்களான நிக் பைசல் அரிப் நிக் ஒத்மான் கமில், சுபோ முகம்மட் யாசின் ஆகிய இருவரையும் “விரைவில்” விசாரணை செய்யும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
எஸ்ஆர்சி ஒரு நேரத்தில் 1எம்டிபி-இன் துணை நிறுவனமாக இருந்தது.
பொய்யான அறிக்கையில் யாரும் திருத்தம் செய்ய மாட்டாங்கன்னு எங்களுக்கு தெரியும். இருந்தாலும் மாட்டிக்கிட்டப் பிறகு திருத்தம் செய்து அகப்படுவது பேராபத்து. திருட்டுத்தனமா செலவளிச்ச பணத்தை எல்லாம் திருப்பி கொடுத்திட்டிங்கான அரசாங்கம் மன்னிச்சு விட்டிடும்.