பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வெளியேற்றுவது அவசியம் என்று பிஎன் எம்பிகள் நினைத்தால் 2016 பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்கிறார் அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா.
“வழக்கப்படி பார்த்தால் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பாக அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்தான்.
“ஆனால், எதிர்ப்பு பிரதமருக்குத்தான் பட்ஜெட்டுக்கு அல்ல என்று நினைத்தால் அதைச் செய்யும் உரிமை அவர்களுக்கு உண்டு”, என்று தெங்கு ரசாலி இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்து நஜிப்பை வெளியேற்றலாம் என்று எதிரணியினர் கூறியுள்ளதன் தொடர்பில் அரசாங்க ஆதரவு பிஎன் எம்பிகளின் நிலைப்பாடு பற்றிக் கேட்டதற்கு அந்த குவா மூசாங் எம்பி இவ்வாறு பதிலளித்தார்.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதைவிட இது ஒரு சாத்தியமான திட்டம் என்று மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவும் கூறியுள்ளார்.
2016ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது..
உங்களுக்கு சாமர்த்தியம் இருந்தா, அமீனோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேரை பட்ஜெட்க்கு எதிராக ஓட்டுப் போட சேருங்கள் பார்ப்போம்.
பிஎன் எம்பிகள் பிரதமருக்கு விசுவாசம் உள்ளவர்கள். அப்படி எல்லாம் செய்யமாட்டார்கள்!
நஜிப்பை தோற்கடித்தாலும் மீண்டும் வும்னோ தான் வரும்,பிறர் வருவது அசாத்தியமே,நாராயண நாராயண.