கிட் சியாங் ஆறு மாத இடைநீக்கம்

siangலிம் கிட் சியாங் (டிஏபி- கேளாங் பாத்தா) மக்களவைத்  தலைவர் பண்டிகார் அமின் மூலியாவை  அவமதித்து  விட்டார்  என்று  அவருக்கு  எதிராக  தீர்மானம்  கொண்டுவரப்பட்டு  6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அத்தீர்மானத்தை  பிஎன்  எம்பிகள்  107  பேர்  ஆதரித்தனர்.  எதிரணியினர்  77 பேர்  எதிர்த்தனர்.

அதன் பின்னர் லிம்  விளக்கமளிக்க  தமக்கு வழங்கப்பட்ட 5  நிமிட  வாய்ப்பில் தாம்  நாடாளுமன்றத்தையோ பண்டிகாரையோ  அவமதிக்கவில்லை  என்றார்.

எம்பிகள்  நாடாளுமன்றக்  குறிப்பேட்டைப்  படித்துப்  பார்த்தால்,  தன்  பேச்சு  அவைத்  தலைவரை  அவமதிக்கும்  வகையில்  இருந்ததா  என்பதைத்  தெரிந்து  கொள்ளலாம்  என்றார்.  அவர்கள் அறிவுத் திறம்  குறைந்தவர்கள்  திங்கள்கிழமை  தான்  பேசியதைப்  புரிந்து கொள்ளவில்லை  என்றாரவர்.

“1எம்டிபி  என்னும் இராட்சத  நோய்க்கு ஆகக்  கடைசி  பலி  நான்”, என்று  லிம்  கூறினார். ஏற்கனவே  முன்னாள்   துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்,  முன்னாள்  அமைச்சர்  ஷாபி  அப்டால்  உள்பட  15 பேர் அதற்குப்  பலியாகியிருப்பதாக  அவர்  குறிப்பிட்டார்.