கிட் சியாங் இடைநீக்கத்தை எதிர்த்து எதிரணி முறையீடு

dapகேளாங்  பாத்தா  எம்பி  லிம்  கிட்  சியாங்  இடைநீக்கம்  செய்யப்பட்டதை  மீள்ஆய்வு  செய்ய  வேண்டும்  என்று  கேட்டுக்கொள்ளும்  தீர்மானத்தை  எதிரணி  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்யும்.

இடைநீக்கம்  செய்யப்பட்டதில்  சரியான  நடைமுறைகள்  பின்பற்றப்பட்டனவா  என்பதை  ஆராய  அத்தீர்மானம்  கொண்டுவரப்படுவதாக  பூச்சோங்  எம்பி  கோபிந்த்  சிங்  டியோ  கூறினார்.

“எங்களைப் பொறுத்தவரை  இன்று  நடந்ததெல்லாம்  நிலை  ஆணைகளுக்கு  எதிரானது”, என  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  பேசியபோது  அவர்  கூறினார்.

லிம்மை இடைநீக்கம்  செய்வதாக  இருந்தால்  பகுதி 80ஏ-இன்கீழ்தான்  செய்திருக்க  வேண்டும். அதன்படி  இடைநீக்கம்  செய்யப்படுபவர்  விவகாரம்  முதலில்  சலுகைக்  குழுவுக்குக்  கொண்டு  செல்லப்பட  வேண்டும்.

அங்குதான்  சம்பந்தப்பட்ட  எம்பி  குற்றம்   புரிந்தாரா  என்பது  தீர்மானிக்கப்படும்  என்றாரவர்.