முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட்டே 1எம்டிபி-இன் அடுத்த “பலி” என்று டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் ஆருடம் கூறியுள்ளார்.
“1எம்டிபி அரக்கனுக்கு இப்போது பலியாகியிருப்பது நான். அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் மகாதிர் உள்பட பலர் பலியாவார்கள்”, என லிம் அறிக்கை ஒன்றில் கூறினார்.
கடந்த ஆண்டு தொடங்கி 1எம்டிபியைக் கடுமையாக விமர்சித்து வருவோரில் மகாதிரும் ஒருவர்.
“1எம்டிபி அரக்கனுக்கு” இதுவரை பலியானவர்கள் பட்டியலையும் லிம் வெளியிட்டிருந்தார்.
முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின், முன்னாள் புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சர் முகம்மட் ஷாபி அப்டால், முன்னாள் சட்டத்துறை தலைவர் கனி பட்டேல் முதலியோர் அதில் இடம்பெற்றிருந்தனர்.
மூவருமே ஜூலை மாதம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் பதவி இழந்தனர்.
ஆட்சியாளர் மன்றம்கூட 1எம்டிபி குறித்து கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்ததையும் லிம் நினைவுறுத்தினார்
அம்னோவின் கிரீஸ் மகாதீரை நோக்கி பாய்கிறது.
ஆகா ! அருமை ! வாழ்த்துக்கள் !
தலைப்புக்கேற்ற படத்தை வெளியிடுவதில் பலே கில்லாடி செம்பருத்தி என்பதை நிருபித்துள்ளீர்கள்.
அம்னோ பாரு என்ற கத்தியை எடுத்தவன் அந்த கத்தியாலேயே சாகனும் என்ற நியதி ஒன்று இருக்கல்லவா!
இன்றைய பட்ஜெட்டில் எல்லா சலுகைகளிலும் அங்கங்கே “கட்” என்றுதான் இருக்கும். அந்த அளவிற்கு நாட்டு நிதி நெருக்கடி வந்திடுச்சி. அதற்கு ஏற்ற மாதிரிதான் செம்பருத்தி செய்தியாளரும் தெரிந்தோ தெரியாமலோ கிரிஸ் கத்தியை போட்டுட்டாரு போல இருக்கு. ஆனால் GST – யில் “கட்” இருக்காது என்பது திண்ணம்.
சீனன், துணைக்கு ஆளு சேர்ப்பதில் சொல்லியா கொடுக்கவேண்டும்! அதுவும் எதிரணி காக்காவுடன் சேர்வது பல வகையில் தம் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பதை நன்கு அறிந்தவன்.யாரை உதாரணம் காட்டுகிறான்? சுதந்திர போராட்ட வாதிகளான மொக்கைதின்,ஷாபி அப்டால், கனி பட்டேல்! இதுவரை நாட்டை நாசமாக்கியது ஆளும் கட்சி மட்டும் அல்ல! அவர்களுடன் கைகோர்த்து ஆட்டம் போட்ட சில எதிர்க்கட்சி தலைவர்களும் அடங்குவர்! இவர்கள் தனியார் வங்கி கணக்குகளை பார்த்தால் மயக்கமே வந்துவிடும்!!!
“UMNO” என்ற மழுங்கிப்போன கிரிஸை “UMNO BARU” என பட்டை தீட்டியது தான் செய்த பெரும் மடத்தனம் என்று மாமா மகாதீர் இப்பொழுதுதாவது உணருவாரா ?
இந்த கம்மனாட்டிகளுக்கு நாடும் எல்லா இன மக்களும் ஒற்றுமையுடனும் வளப்பத்துடனும் வாழ வேண்டும் என்று உண்மையிலேயே நினைத்திருந்தால் இந் நாடு இந்த நிலைக்கு வந்திருக்காது. கம்மனாட்டிகள் பதவியில் உட்கார்ந்து எல்லாவற்றையும் அனுபவிக்கவே இவ்வளவி தில்லு முள்ளும்.
இன்று மகதீர் நல்லவர் ஆகிவிட்டார்,.இலக்கியம் மாறலாம் ஆனால் இலக்கணம் மாறாது மாற்றவும் முடியாது.ஊழ் என்ற குறளை வாசித்தால் புரியும்,வாழ்க நாராயண நாமம்.
நீர் மூட்டிய தீயில் வேறு யார் மடிவார்………..?
ஆமாம் செண்டிநெல் சொன்னது போல் இவனுங்க கணக்கையும் கொஞ்சம் கிண்டி பார்க்கணும். நாடாளுமன்றத்துக்கு அனுப்புனா உள்ளே போய் நீ போக்கிரி ராஜானு சபா நாயகர பார்த்து திட்டவேண்டிய கூமுட்டை. வெளியே இருந்து கொலைச்சா கல் அடித்தான் கிடைக்கும். பட்டுகோ, மத்தவங்களாம் இழுத்து நீ ஈரோ வாகிற நாடகம் எல்லாம் நடத்தாதிங்க சார் கிட் சியாங்.