சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, தமக்குப் பதிலாக அண்மையில் பிகேஆரில் இணைந்த சைபுடின் அப்துல்லாவை “ராவாங் திட்ட”த்தின்வழி மந்திரி புசாராக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார்.
Babab.net என்னும் வலைப்பதிவு ராவாங் திட்டம் அஸ்மினைப் பதவியிலிருந்து அகற்றும் நோக்கம் கொண்டது எனக் கூறியிருந்தது.
“அதென்ன ராவாங் திட்டம்? அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. வதந்திகளை நம்பாதீர்கள். அது உண்மை அல்ல. அதனால்தான் நான் இதுவரை அதைக் கேள்விப்படவில்லை”, என அஸ்மின் தெரிவித்ததாக உத்துசான் மலேசியா கூறியது.
ராவாங் சட்டமன்ற உறுப்பினர் கான் பெய் நே பதவி விலகி சைபுடின் அங்கு போட்டியிட இடமளிப்பார் என அந்த வலைப்பதிவு கூறியது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவிலிருந்து பாஸ் உறுப்பினர்களை வெளியேற்ற அஸ்மின் மறுப்பதுபோல் தோன்றுவதால் அவரைப் பதவியிலிருந்து தூக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அது கூறிற்று.
குடும்ப அரசியலின் நோக்கம்தான் என்ன?,காலிட்,அஸ்மின் பாஸ் அடுத்து யார்?.நாராயண நாராயண.