சீனச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை குறைந்ததற்குக் குடிநுழைவுத் துறை காரணமல்ல

tourசீனச்  சுற்றுப்பயணிகள்  மலேசியாவுக்கு  வருகை  புரிய  தயக்கம்  காட்டுவதற்கு  விசாவைக்  காரணம்  காட்டி  குடிநுழைவுத்  துறைமீது  பழி  போடுவது  நியாயமல்ல  என  உள்துறை  துணை  அமைச்சர்  நூர்  ஜஸ்லான்  கூறினார்.

விசா  ஒரு  பிரச்னையே  அல்ல  என்று  கூறிய  அதற்கு  வேறு  காரணங்கள்  உள்ளன   என்றார்.

“விசா  கட்டணம்  சீனச்  சுற்றுப்பயணிகள்  மலேசியா  வருவதற்குத்  தடையாக  இல்லை. அதற்கு  சீனாவுக்கும்  மலேசியாவுக்குமிடையிலான  விமானப் பயணங்கள்  குறைவாக  இருத்தல்,  எம்எச்370  விவகாரம்,  சாபாவில் ஆள்கள்  கடத்தப்படும்  சம்பவங்கள்  போன்ற  வேறு  முக்கியமான  காரணங்கள்  இருக்கின்றன”, என  பெய்ஜிங்கில்  செய்தியாளர்களிடன் நூர்  ஜஸ்லான்  தெரிவித்தார்.