பிரதமர் பட்ஜெட் உரையை முடித்தவுடன் எழுந்த கேள்வி “ரிம2.6 பில்லியன் எங்கே?

 

 நிதி அமைச்சர் நஜிப் ரசாக் 2016 ஆம் ஆண்டுக்காண பட்ஜெட் உரையை 90 நிமிடங்களுக்கு நிகழத்தி முடித்தவுடன், நாடாளுமன்ற எதிரணி உறுப்பினர்கள் ஒன்றாக அட்டையைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றனர். அந்த அட்டையில் “ரிம2.6 பில்லியன் எங்கே?” என்று எழுதப்பட்டிருந்தது.

இதனால் அவையில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இக்கேள்வியில் அடங்கியிருக்கும் “ரிம2.6 பில்லியன்” நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட தொகையைக் குறிப்பிடுகிறது. இது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

பின்னர், இத்தொகை கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பெயர் குறிப்பிடப்படாத ஒரு மத்தியக்கிழக்கு வட்டாரத்திலிருந்து அரசியல் நன்கொடையாக பெறப்பட்டது. இக்கூற்றை முன்னாள் பிரதமர் மகாதிர் போன்ற பலர் ஏற்றுக்கொள்ளவில்லை.

தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறிக்கொள்ளும் பிரதமர் நஜிப், இது அவரை பதவியிலிருந்து அகற்ற மகாதிர் போன்றோர் மேற்கொண்டுள்ள சதி என்று குற்றம் சாட்டினார்.