அஸ்மின்: பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது

budபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நேற்று  தாக்கல்  செய்த பட்ஜெட் 2016,  பொருளாதார  வளர்ச்சியைத்  தூண்டிவிடாது  உண்மையில்  அதை  மந்தப்படுத்தி விடும்  என்று  சிலாங்கூர்  மந்திரி  புசார்   அஸ்மின்  அலி  கூறினார்.

“பட்ஜெட்  2016  மிகுந்த  ஏமாற்றத்தைத்  தருகிறது.  அது  பொருளாதார  வளர்ச்சிக்கு  மிகவும்  தேவைப்படும்  உந்து  சக்தியைக்  கொடுக்கவில்லை.

“பொருளாதார  வளர்ச்சியைத்  தூண்டிவிடுவதற்குப்  பதிலாக  அது  வளர்ச்சியை மந்தப்படுத்தி  விடும்”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

முதலீடும்   பயனீட்டாளர்  கொள்முதலும்  பொருளாதார  வளர்ச்சிக்குத்  தேவையான  இரண்டு  முக்கிய  கூறுகள்.

நாட்டில்  நிலவும்  நிதி ஊழல்களால்  முதலீட்டாளர்  நம்பிக்கை  கடுமையாக  பாதிக்கப்பட்டிருக்கிறது.  பொருள்  சேவை  வரி(ஜிஎஸ்டி),   கூடுதல்  வருமான  வரி  ஆகியவற்றால்  பயனீட்டாளர்களின்  பொருள்  வாங்கும்  ஆர்வமும்  குன்றி  விட்டது.

பட்ஜெட்  முதலீட்டாளர்களின்  நம்பிக்கையைப்  பெருக்க  எதுவும்  செய்யவில்லை  என்றாரவர்.

ஜிஎஸ்டி  பற்றி  பிரதமர்  பெருமையாகக்  குரிப்பிட்டதையும்  அஸ்மின்  அலி  குறை  கூறினார்.

அது  பெருமைப்பட்டுக்  கொள்ளும்  அளவுக்குப்  பெரும்  சாதனை  அல்ல.

“வரிக்குமேல்  வரி போட்டு  மக்களை  வாட்டினால்  வருமானம் பெருகும்தான்”, என்றாரவர்.

மலேசியாவில்  ஜிஎஸ்டி  அமல்படுத்தவதற்கும் மற்ற  நாடுகளில்  அமல்படுத்தப்படுவதற்கும்  வேறுபாடு  உண்டு.

மற்ற  நாடுகளில்  ஜிஎஸ்டி-யை  அமல்படுத்தும்போது  வருமான  வரி,  நிறுவன  வரி  போன்றவற்றைக்  குறைப்பார்கள். மலேசியாவில்  அப்படி  அல்ல.

“வரிக்குமேல்  வரி  என  மலேசியர்கள்  கூடுதல்  வரி  செலுத்த  வேண்டியதாகிறது

“உண்மையில்  நஜிப்  அரசாங்கம்  வருமானத்தைப்  பெருக்கத்  தவறி விட்டது. ஜிஎஸ்டியால்தான்  பிழைத்துக்  கொண்டிருக்கிறோம்”, என்றவர்  குறிப்பிட்டார்.

பணவீக்கப்  பிரச்னைக்கும்  பட்ஜெட்  தீர்வு  காணவில்லை  என்றாரவர்.