சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியைப் பதவியிலிருந்து வெளியேற்ற ‘லங்கா ராவாங்’ என்ற பெயரில் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை பிகேஆர் மகளிர் தலைவி ஸுரைடா கமருடின் நிராகரித்தார்.
முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லாவை பிகேஆர் தன் பக்கம் இழுத்துக் கொண்டதை அடுத்து இப்படிப்பட்ட வதந்தி புறப்பட்டுள்ளது என்றாரவர்.
“அதனால் தங்கள் பெருமை குலைந்துபோனதாக நினைக்கும் அம்னோ உறுப்பினர்கள் தங்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ள ஒரு வதந்தியை உருவாக்கி விட்டிருக்கிறார்கள்”, என்றவர் கூறினார்.
நம்ப அண்ணாச்சி அன்வர் எப்டியாவது மலேசியாவின் உயரிய பிரதமர் பதவியை அலங்கரிக்க ஆசை பட்டார் (ன்) …ஆனால்… பிரதமர் பதவி கேள்விக்குறியாகவே இருக்கிறது ……
அதற்கு முன் எப்டியாவது தன் குடும்ப உறுப்பினர் ஒருவரை சிலாங்கூர் முதலமைச்சர் பதவியில் அலங்கரிக்க காய் நகர்த்துகிறான் ….காஜாங் கிழிஞ்சி போச்சி ….ராவாங் நாறபோகிறது ….
வதந்தியா அவசர தந்தியா என்பது போக போக தெரியும்.காலிட்டை இப்படிதான் கவிழ்தீர்,யு.ஐ.தி.எம்மில் நம் மக்களும் வாய்ப்பு பெற்றனர்.யார் காரணம்,நாராயண நாராயண.
அரசியல்ல இதெல்லாம் சகஜம் அப்பா….
நஜிப் மனைவி ஆணைப்படி செயல்படுகிறார்,ஆனால் அன்வர் குடும்ப அரசியல் நடத்துகிறார்.எது சுயநலம்,நாராயண நாராயண.