கீழறுப்பு, வேவுபார்த்தல், நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளில் அதிகார அத்துமீறல் நிகழாது என புத்ரா ஜெயா உத்தரவாதம் அளிக்கிறது.
குற்றம்சாட்டப்படுவோர்மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்படும்போது அவர்கள் எதிர்வாதம் செய்ய இடமுண்டு என்பதால் அதிகார அத்துமீறல் நிகழ வாய்ப்பில்லை என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
“நாடாளுமன்ற ஜனநாயகத்தை மிரட்டியதற்காகவும் கீழறுப்புச் செயல்களில் ஈடுபட்டதற்காகவும், வேவுபார்த்ததற்காகவும் எழுவர் விசாரிக்கப்படுகிறார்கள். அவர்களில் இதுவரை இருவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது”, என்று அவர் சொன்னார்.
இவ்விவகாரத்தில் குற்றவியல் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறா, அது பயன்படுத்தப்படுவதற்கு வேறு நோக்கம் ஏதும் உண்டா என்று லிம் கிட் சியாங் (டிஏபி-கேளாங் பாத்தா) கேட்டிருந்த எழுத்துப்பூர்வமான கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்
பரவாலே! கேக்க நல்லாவே இருக்கு!
நம்பிட்டோம் !