பிரதமரின் விமானத்துக்கு ஆறு மாதங்களில் ரிம40.8மில்லியன் செலவானது

costபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பயன்படுத்தும்   ஜெட்  விமானத்துக்கு  வாடகை, பராமரிப்புச்  செலவு, பயணச்  செலவு  என ஆறு  மாதங்களில்  ரிம40.8 மில்லியன்  செலவானதாக  பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லி  கூறினார்.

அந்த  ஏசிஜே320  ஜெட்  2015  ஏப்ரலுக்கும்  செப்டம்பருக்குமிடையில்  42  தடவை  பறந்திருப்பதாக  பிகேஆர்  உதவித்  தலைவருமான  ரபிஸி  தெரிவித்தார்.

அந்த  ஆறு  மாத  காலத்தில் வாடகையாக  ரிம13.3 மில்லியனும், பராமரிப்புக்காக  ரிம23 மில்லியனும்  பயணங்களுக்காக  ரிம4.5 மில்லியனும்  செலவிடப்பட்டது.

“இந்தப்  புள்ளிவிவரம்  தப்பு  என்றால்  சரியான  புள்ளிவிவரத்தை  அரசாங்கம்  வெளியிடட்டும்.

“அது  வெளியிடாவிட்டால்  இந்தப்  புள்ளிவிவரம்  சரியானதே  என்று  அனுமானித்துக்  கொள்வோம்”, என  ரபிஸி  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

அந்த  விமானத்துக்கான  செலவுத்தொகையை  வெளியிட  அரசாங்கம்  மறுத்து  விட்டதால் ரபிஸி  ரிம40.8 மில்லியன்  செலவானதாகக்  குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில்  அது  பற்றி  வினவியதற்கு  பிரதமர்  துறை  அமைச்சர்  அஸலினா  ஒத்மான்  அவ்விமானம்  42  தடவை  பறந்திருப்பதாக  மட்டுமே  தெரிவித்தார்.