ஹனிபா: காலிட்டுக்கு பிணை அளிக்க வேண்டும்

 

Ismathசிறையிலடைக்கப்பட்டிருக்கும் சமூக தன்னார்வலர் காலிட் முகமட் இஸ்மாத் பிணையில் வெளிவருவதற்கு சட்டத்துறை தலைவர் முகம்மட் அப்பாண்டி மனிதமிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான முகமட் ஹனிபா மைடின் (அமனா-சிப்பாங்) கேட்டுக்கொண்டார்.

சமூக ஊடகத்தில் ஜொகூர் அரச குடும்பத்தைப் பற்றி பதிவுகள் செய்ததற்காக அவருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவரின் மனைவி மற்றும் குடும்பத்திற்காக இரக்கம் காட்டுவதுடன் அவர் கோரியிருக்கும் பிணை மனுவுக்கு ஆட்சேபம் தெரிவிக்க வேண்டாம் என்று ஹனிபா சட்டத்துறை தலைவரை மன்றாடி கேட்டுக்கொள்வதாகவும் அவர் அதற்கு இணங்குவார் என்று நம்புவதாகவும் ஹைனிபா மேலும் கூறினார்.

சட்டத்துறை தலைவர் தெரிவித்த ஆட்சேபத்தின் காரணமாக செசன்ஸ் நீதிமன்றம் காலிட்டுக்கு பிணை அளிக்க மறுத்து விட்டது.

காலிட் செசன்ஸ் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஜொகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறித்து கருத்துரைத்த ஹனிபா இவ்வாறு கூறினார்.