விவேகானந்தா ஆசிரமம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும்

ashramamதேசிய  பாரம்பரிய  ஆணையம், பிரிக்பீல்ட்ஸ்  விவேகானந்தா  ஆசிரமத்தைப்  பாரம்பரிய  சின்னமாக  அறிவிக்க  முடிவு  செய்திருப்பதாக  சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்  கூறினார்.

அந்த  110-ஆண்டு  கட்டிடம்  தேசிய  பாரம்பரிய  சின்னமாக  அரசிதழில்  பதிவு  செய்யப்படும்  என  அமைச்சர்  மக்களவை  கேள்வி  நேரத்தின்போது  தெரிவித்தார்.

அம்முடிவுக்கு  எதிராக  கட்டிட  உரிமையாளர்   ஜூலை  15-இல்  மேல்முறையீடு  செய்திருந்ததாகவும்  அவர்  சொன்னார்.

“மேல்முறையீடு  தள்ளுபடி  செய்யப்பட்டது. இவ்விசயத்தில்  அமைச்சரின்  முடிவே  இறுதியானது.  எல்லா  நடைமுறைகளும்  பின்பற்றப்பட்டிருந்ப்பதால்  இனி  மேல்முறையீடு  எதுவும்  இருக்காது”, என  நஸ்ரி  கூறினார்.

அரசாங்கத்தின்  முடிவுக்கு  நன்றி  தெரிவித்த  எம்.குலசேகரன்,  விவேகானந்தா  ஆசிரமத்தை  ஒரு  சுற்றுலா  கவர்ச்சி  மையமாக  உருவாக்க  அரசாங்கம்  நிதியுதவி  செய்ய  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டார்.

அதற்கு  நஸ்ரி,  அச்சொத்தைப்  பராமரிக்கும்  பொறுப்பை  உரிமையாளர்கள்தான்  ஏற்க  வேண்டும்  என்றும்  அரசாங்கம்  நிதியுதவி  செய்வதற்கில்லை  என்றும்  சோன்னார்..