முகைதினை வெளியேற்ற சதியா? அப்படி எதுவும் இல்லை என்கிறார் நஸ்ரி

nazriஅம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ், கட்சியிலிருந்து  துணைத்  தலைவர்  முகைதின் யாசினை வெளியேற்ற  சதி  நடப்பதாக  சுங்கை  புசார்  அம்னோ  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனூஸ்  கூறியிருப்பதை  அபத்தம்  என்று  வருணித்தார்.

“அது  அவருடைய  சொந்த  கருத்து.  அவர்  ஒன்றும்  முக்கியமான  புள்ளி  அல்ல.

“என்னிடம்  (கேள்வி)  கேட்பதாக  இருந்தால்  வெளிநாட்டவர்  நம்  நாடு  பற்றித்  தெரிவிக்கும்  கருத்துகள்  பற்றியோ  எதிரணித்  தலைவர்  பற்றியோ  கேளுங்கள்.  இது  வெற்று  வேட்டு”, என நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  நஸ்ரி  கூறினார்.

100-க்கு  மேற்பட்ட  அம்னோ தொகுதித்  தலைவர்கள்  முகைதினையும்  அவரின்  ஆதரவாளர்களையும்  கட்சியிலிருந்து  தூக்க  இரகசிய  கூட்டம்  நடத்தியதாக  ஜமால்  கூறியதற்கு  அவர்  இவ்வாறு  எதிர்வினை  ஆற்றினார்.

கருத்துச்  சொல்ல  முகைதினுக்கு  உரிமை  உண்டு  என்றும்  நஸ்ரி  கூறினார்.

“இது  சுதந்திர  நாடு  ஐயா”,  என்றார்.