அடுத்த ஆண்டில் வெளிநாட்டவருக்கு இரட்டிப்பு மருத்துவக் கட்டணம்

workerஅடுத்த  ஆண்டு  அரசாங்க மருத்துவ  நிலையங்களில்  சிகிச்சை  பெறும்  வெளிநாட்டவர்  கிட்டத்தட்ட  இரட்டிப்பு  மருத்துவக்  கட்டணம்  செலுத்த  வேண்டியிருக்கும்.

இப்போது  வெளிநாட்டவருக்குச்  சிகிச்சைக்  கட்டணம்  ரிம23.

“புதிய  கட்டணம்  சுமார் ரிம40 ஆக  இருக்கும். ஐந்து  நாளைக்கான மருந்துகள்  வழங்கப்படுவதற்கு  இந்தக்  கட்டணம்”,  எனச்  சுகாதார  அமைச்சர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்  கோலாலும்பூரில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.
“முன்பு  உதவித் தொகை  வழங்கப்பட்டது.  இப்போது  செலவாகும்  தொகையைக்  கட்டணமாக  வசூலிக்கப் போகிறோம். அவர்களை  வைத்து  ஆதாயம்  காணப்போவதில்லை”, என்று  அவர்  விளக்கினார்.

வெளிநாட்டுத்  தொழிலாளர்களால்  கட்டணத்தைச்  செலுத்த  முடியாவிட்டால்……….?  அவர்களை  வேலைக்கு  வைத்திருப்பவர்கள்தான்  பொறுப்பு  என்றார்.