தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் கலந்துகொள்ளத் தயரா என்று டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா விடுத்த சவாலை ஏற்றுக்கொள்ள 1எம்டிபி தலைவர் அருள் கந்தா முன்வந்துள்ளார். ஆனால், ஒரு நிபந்தனை. புவா நாடாளுமன்றக் கணக்குக்குழுவிலிருந்து விலக வேண்டும்.
நேற்று புவா விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டு 1எம்டிபி பற்றிய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க ஆயத்தமாக இருப்பதாய் ஓர் அறிக்கையில் அருள், கூறினார்.
ஆனால், புவா பொதுக் கணக்குக்குழு(பிஏசி)வில் இருக்கக் கூடாது.
“புவா 1எம்டிபிமீது விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்.
பிஏசி-இன் உறுப்பினர் என்பது அனைவரும் அறிந்ததே”, என்றாரவர்..
“புவா ஒரே நேரத்தில் நீதிபதியாகவும் நடுவர் குழுவாகவும் தண்டனையை நிறைவேற்றுபவராகவும் இருக்க முடியாது”, என அருள் கூறினார்.
எப்படி போட்டான் பாரு ? 1எம்டிபி தலைவர் அருள் கந்தாவா இல்ல கொக்கா ?
முடியுமா, முடியாதா? அதிலென்ன ஆனா? மேடை விவாதத்தில் இருவருமே வாதிகள்தான். நடுவர் இருந்தால் உண்டு. இல்லையேல் மக்கள்தான் நடுவர். மக்கள்தான் நீதிபதி. அப்புறம் எப்படி புவா “நீதிபதியாகவும், நடுவர் குழுவாகவும், தண்டனையை நிறைவேற்றுபவராகவும்” ஆக முடியும்? அறுக்கமாட்டாதவனுக்கு அம்பத்தெட்டு அருவாளாம்.
மடியில் கணம் இல்லேயேல் வழியில் என்ன பயம் அருள்கொண்டா.துணிவு இருந்தால் மேடை விவாதத்திற்கு தயாராகுங்கள்.இல்லேயேல் வாய் மூடி அமைதியாய் இருங்கள்.