பெர்சே 4 சம்பந்தமாக மரியா சின் குற்றம் சாட்டப்படவிருக்கிறார்

Mariatobe chargedபெர்சே 4 பேரணி தொடர்பாக அதன் தலைவர் மரியா சின் குற்றம் சாட்டப்படவிருக்கிறார் என்று அந்த இயக்கத்தின் அதிகாரி மன்டீப் சிங் கூறுகிறார்.

அமைதியான ஒன்றுகூடுதல் சட்டத்தின் கீழ் மரியா குற்றம் சாட்டப்படுவார் என்று மன்டீப் டிவிட் செய்துள்ளார்.

34 மணி நேரத்திற்கு நடைபெற்ற அந்தப் பேரணியில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்பேரணியில் பங்கேற்ற மக்களின் பெரும்பாலானோர் சீனர்கள் என்ற அடிப்படையில் அப்பேரணிக்கு இன அடையாளம் இடப்பட்டது.

அதற்கு எதிராகச் சிவப்புச் சட்டை பேரணி செப்டெம்பர் பேரணி நடத்தப்பட்டது.

மரியாவிடம் அவர் குற்றம் சாட்டப்படவிருக்கிறார் என்று தெரிவித்த போது அவர் அதிர்ச்சி அடைந்தார்.

“நாங்கள் பேரணி நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் போலீசாரிடம் தெரிவித்தோம்”, என்று மரியா தெரிவித்தார்.