1எம்டிபி தலைவர் அருள் கந்தா பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவாவுடன் வாதமிடுவதற்கு விதித்திருந்த நிபந்தனையைக் கைவிட்டார்.
“டோனி புவாவுடன் வாதமிடுவதற்கு விதித்திருந்த நிபந்தனையை மீட்டுக்கொள்கிறேன். நிபந்தனையின்றி அவரைச் சந்திப்பேன்”, என அருள் கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புவா, 1எம்டிபி விவகாரங்கள் பற்றி அருளுடன் தொலைக்காட்சியில் உரையாட தாம் தயார் என்றும் அருள் தயாரா என்றும் கடந்த புதன்கிழமை சவால் விடுத்திருந்தார்.
அருள் சவாலை ஏற்றார். ஆனால் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டுமானால் புவா 1எம்டிபிமீது விசாரணை நடத்திவரும் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிலிருந்து விலக வேண்டும் என்று நிபந்தனை போட்டார்.
டோனி புவாவின் பல கேள்விகளுக்கு, அருள் கந்தாவின் ஒருவரி பதில் : “1MDB-மீது நாடாளுமன்ற பொது கணக்கு குழு விசாரணை நடத்தி வருவதால் இக்கேள்விகளுக்கு பதிலளிப்பது முறையாகாது”.