1எம்டிபி தலைவர் அருள் கந்தா கந்தசாமி தாம் அரசியல்வாதி அல்ல என்றும் அதனால் “அரசியல் விவகாரங்கள்” பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாது என்றும் கூறினார்.
“நான் இதைத் தெளிவுபடுத்த வேண்டும். நான் அரசியல்வாதி அல்ல. நான் ஒரு தொழில் நிபுணன்.
“எனவே, அரசியல் விவகாரங்களையும் கேள்விகளையும் அரசியல்வாதிகளிடம்தான் கேட்க வேண்டும்”,என்று அவர் சொன்னார்.
கோலாலும்பூரில் செய்தியாளர்கள் கூட்டமொன்றில் கலந்துகொண்ட அருளிடம் ஆளும் கட்சி எதிரணி என இரண்டு பக்கங்களில் உள்ளவர்களும் 1எம்டிபி பற்றிக் குறை சொல்வது பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டதற்கு இவ்வாறு பதிலளித்தார்.
உன் நிர்வாகத்தில் பண ஊழல் ….
அதைதான் கேள்வி, விளக்கம் தேவை
ஆனால், அதற்கானத் தகுதிகள் அனைத்தையும் இந்நேரம் உங்கள் தலைவர் சொல்லிக் கொடுத்திருப்பாரே!
எனக்கு முந்திய நிர்வாகத்தில் நிகழ்ந்த “பண ஊழலை” எனது “தொழில் நிபுணதத்துவ” ஆற்றலின் மூலமாக சரி செய்ய முடியும் என நம்பும் “1MDB” ஆலோசகரின் கனவுகளை நினைவாக்கவே நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆகவே, எனது நிர்வாகத்தில் “பண ஊழல்” என்று கூறுவது மிகவும் தவறு என்றும், நான் ஒரு “தொழில் நிபுணுத்துவவாதி” “ஊழல்வாதி” அல்ல என்ற அருள் கந்தாவின் தன்னிலை விளக்க அறிக்கை விரைவில் வெளியிடபடுமாம்.