பயங்கரவாதக் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டர்களில் அரசு அதிகாரியும் ஒருவராவார்.
அக்டோபர் 30-இல், சிலாங்கூர், பேராக், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் தெரிவித்தார்.
அவர்களில் அறுவர் தாண்ட்ஸிம் அல்- கைடா மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவர் ஐஎஸ் தீவிரவாதக் கும்பலுடன் தொடர்புள்ளவர்கள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
“சந்தேகப் பேர்வழிகள் அனைவருமே 22க்கும் 36 வயதுக்கும் இடைப்பட்ட மலேசியர்கள். அவர்களில் ஒருவர் அரசாங்க ஊழியர்”, என காலிட் ஓர் அறிக்கையில் கூறினார்.
எந்த நாட்டுப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு?
எண்மர்தான் கைதா ? சும்மா தமாஷ் பண்ணாதீங்க !