பெர்சே4 தடைக்கு எதிராக வழக்கு: ஜனவரியில் விசாரணை

bersihபெர்சே 4 என்னும்  சொற்களைத்  தடை  செய்யும் உள்துறை  அமைச்சின்  உத்தரவைத்  தள்ளுபடி  செய்ய  பெர்சே  செய்து கொண்டிருக்கும்  மனு  ஜனவரி 7-இல்  விசாரணைக்கு  வருகிறது.

நீதிபதி  அஸிமா  ஒமார்  அதை  விசாரிப்பார்  என  வழக்குரைஞர்  நியு  சின்  இயு  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“பெர்சே-இன் உறுதிமொழி  ஆவணத்துக்கு  நவம்பர்  23-க்குள் பதில்  அளிக்க  வேண்டுமாய்  உள்துறை  அமைச்சரை  நீதிமன்றம்  கேட்டுக்கொண்டிருக்கிறது”, என்றாரவர்.

ஆகஸ்ட்  27-இல், ‘பெர்சே 4’-க்குத்  தடை  விதிக்கப்பட்டு  அது  அரசிதழில்  வெளியிடப்பட்டிருப்பதாக  உள்துறை அமைச்சு  அறிவித்தது.

தடை  உத்தரவைத்  தொடர்ந்து  ஆகஸ்ட் 29-30 பேரணியில்  பெர்சே 4 டி-சட்டை அணிந்திருப்போர்  கைது  செய்யப்படுவார்கள்  என  போலீசார்  மருட்டினர்.

பிரதமரின்  பதவி  விலகலுக்குக்  கோரிக்கை  விடுத்து  நடத்தப்பட்ட அப்பேரணியின்  இரண்டாம்  நாளில்  மலாக்காவில் பெர்சே4 டி-சட்டை  அணிந்திருந்ததற்காக  12 பேர்  கைது  செய்யப்பட்டனர்.