1எம்டிபி விவகாரம் அன்னிய முதலீட்டை பாதிக்கவில்லை

invest1எம்டிபி விவகாரம்  வெளிநாட்டு  முதலீட்டின்மீது  எந்தத் தாக்கத்தையும்  ஏற்படுத்தவில்லை எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறுகிறார்.

உண்மையில்  அன்னிய  முதலீடு  கூடியுள்ளதாக  அவர்  சொன்னார்.

“1எம்டிபி  விவகாரம் அன்னிய  முதலீட்டாளர்கள்  மலேசியாவில்  முதலீடு  செய்வதை  எந்த  வகையிலும்  தடுக்கவில்லை.   சொல்லப்போனால். ஆகக்  கடைசி  புள்ளிவிவரங்கள் அவர்களுக்கு  நாட்டின்  பொருளாதாரத்தின்மீது நம்பிக்கை  இருப்பதைத்தான்  காண்பிக்கின்றன”, என  நஜிப்  கூறினார்.

2015 முதல்  பாதி ஆண்டில்  மொத்தம்  ரிம22.4 பில்லியன்  அன்னிய  நேரடி  முதலீடு  நாட்டுக்குள்  வந்துள்ளது. கடந்த  ஆண்டில்  இதே  காலக் கட்டத்தில்  வந்த அன்னிய  முதலீடு  ரிம17.5 பில்லியன்.

நாடாளுமன்றத்தில் வழங்கிய  எழுத்துப்பூர்வ  பதிலில்  நஜிப்  இப்புள்ளிவிவரங்களைக்  குறிப்பிட்டிருந்தார்.