2013 கேமரன் மலை வெள்ளம் தொடர்பில் டிஎன்பிமீது வழக்கு

floodகேமரன்  மலை  குடியிருப்பாளர்கள்  சுமார்  100 பேர்,  2013-இல்  அங்கு  திடீர்  வெள்ளம்  ஏற்பட்டதற்கு  தெனாகா  நேசனல்  பெர்ஹாட் (டிஎன்பி) அணக்கட்டைத்  திறந்து  விட்டதுதான்  காரணம்  என்று  கூறி டிஎன்பிக்கு  எதிராக  வழக்கு  தொடுத்துள்ளனர்.

அவர்கள்  தங்கள்  இழப்புகள்  ஈடு  செய்யப்பட  வேண்டுமெனக்  கோரிக்கை  விடுத்துள்ளனர்.

அவர்களுக்காக  2013  பொதுத்  தேர்தலில்  கேமரன்  மலை  நாடாளுமன்றத்  தொகுதியில்  போட்டியிட்டுத் தோற்ற  வழக்குரைஞர்  எம். மனோகரன்  வழக்கைப்  பதிவு  செய்தார்.

அணைக்கட்டிலிருந்து  நீர்  திறந்து  விடப்பட்டதால்  ஏற்பட்ட  வெள்ளப் பெருக்கில்  நால்வர்  மாண்டவர்.  அவர்களில்  மூவர்  வெளிநாட்டுத்  தொழிலாளர்கள்.