கெரேதாஅபி தானா மலாயு(கேடிஎம்), கிள்ளான் பள்ளத்தாக்கில் கேடிஎம் கம்யுட்டர் சேவைக்கான கட்டணம் டிசம்பர் 2-இலிருந்து கூடும் என அறிவித்துள்ளது.
“ஆண்டுதோறும் நடைமுறைச் செலவும் பராமரிப்புச் செலவும் அதகரித்து வருவதால் புதிய கட்டண அமைப்பு அதை ஈடு செய்யும்”, என கேடிஎம் தலைவர் சர்பினி திஜான் கூறினார்.
ரிங்கிட் மதிப்பு குறைந்ததால் உபரிப் பாகங்களுக்குக் கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.
ஒருவழிப் பயணத்துக்கான கட்டணம் அதிகபட்சம் ரிம7.10 ஆக உயர்த்தப்படலாம் என்றாரவர்.
தஞ்சோங் மாலிம்- சுங்கை காடுட், பத்துமலை- கிள்ளான் துறைமுகம் ஆகிய வழித்தடங்களுக்கு மட்டுமே இந்தக் கட்டண உயர்வு.
சப்சிடியை முற்றாக அகற்றினால் மக்கள் தன்னை வுணர வாய்ப்பளிக்கும்.நாடு திவால் ஆக ஆசைபடும் மக்களுக்கு ஆத்ம திருப்தி கிட்டும்,நாராயண நாராயண,