அன்வாரை விடுவிக்க ஐநா பணிக்குழு வலியுறுத்து

releaseஐநா  குழுவொன்று  முன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமைச்  சிறையில்  தடுத்து  வைத்திருப்பது  தேவையற்றது  என்றும்  அவரை  உடனடியாக  விடுவிக்க  வேண்டும்  என்றும்   வலியுறுத்தியது.

அன்வாரின்  வழக்கை  ஆராயும்போது  அவருக்கு  ஏற்பட்ட  துன்பங்கள்  அநியாயமானவை   என்று  தன்னிச்சை  தடுப்புக்காவல்  மீதான  அக்குழு  கூறிற்று.

“இதற்குத்  தீர்வு  அவரை  உடனடியாக  விடுவித்து  பறிக்கப்பட்ட  அவரது  அரசியல்  உரிமைகளைத்  திரும்ப  ஒப்படைப்பதுதான்”, என்று  அது  கூறியது.

ஐநா  குழு  ஓர்  அறிக்கையில்  தெரிவித்த  இக்கருத்தை  பிகேஆர்  பாடாங்  செறாய்  எம்பி  என்.சுரேந்திரன்  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  வாசித்துக்  காண்பித்தார்.