பெர்சே4: ‘தெரியப்படுத்தவில்லை’ குற்றச்சாட்டுக்கு எதிராக மரியா சின் விசாரணை கோரினார்

mariaபெர்சே  தலைவர்  மரியா சின்  அப்துல்லாமீது  ஆகஸ்ட் 29-30  பேரணி  குறித்து  10 நாள்களுக்கு  முன்னதாகவே  போலீசுக்குத் தெரியப்படுத்தவில்லை  என்று கோலாலும்பூர்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  அமைதிப்  பேரணிச்  சட்டம்  பிரிவு  9-இன்கீழ்  இன்று  குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டை  எதிர்த்து  அவர்  விசாரணை  கோரினார்.

மரியா  சின்  அச்சட்டத்தின்கீழ்க்  குற்றம்  சாட்டப்படும் இரண்டாவது  நபராவார்.

கடந்த  மாதம் பெர்சே  உதவித் தலைவர்  லாசிம்பாங்மீது  பெர்சே  பேரணியை சாபாவில்  ஏற்பாடு  செய்ததற்காக  இதே  குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அப்பேரணி  மற்றவற்றோடு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பதவி  விலகலுக்கும்  கோரிக்கை  விடுத்தது.