புவா: 1எம்டிபி விவாதம் எந்த நிலை ஆணையை மீறுகிறது, சொல்வீர்

order1எம்டிபி  விவாதம்  நடந்தால்  நாடாளுமன்ற  நிலை  ஆணை  மீறப்படும்  என்று  கூறப்படுகிறதே,  மீறப்படும்  நிலை  ஆணை  எது  என்ற  கேள்வியை  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியாமுன்  வைத்துள்ளார்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா.

டோனி  புவா  அருளுடன்  விவாதமிட  விரும்பினால்  பொதுக்  கணக்குக்குழு(பிஏசி)விலிருந்து  விலக  வேண்டும்  அல்லது  1எம்டிபி மீதான  விசாரணையில்  கலந்துகொள்வதைத்  தவிர்க்க  வேண்டும்  என்று  மக்களவைத்  தலைவர்  கூறியிருந்தார்.

“இது  நியாயமல்ல.  நான்  இன்று  காலையிலேயே  கூறினேன்,  நான்  கேட்கப்  போகும்  கேள்விகளுக்கும்  பிஏசி-க்கும்  தொடர்பிருக்காது  என்று.

“இவை  எல்லாமே  பொதுமக்கள்  அக்கறை  கொண்ட  கேள்விகள். அவற்றைக்  கேட்பதால்  எவ்வாறு (நாடாளுமன்ற)  விதிகள்  மீறப்படும்?”, என புவா  வினவினார்.