நேற்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய இடைநிலப்பள்ளிச் சீருடை அணிந்த மாணவனும் மாணவியும் கட்டிப்பிடித்து முத்தமிடுவதைக் காண்பிக்கும் காணொளியின் பின்னணியைக் கல்வியமைச்சு ஆராய்ந்து வருகிறது.
இதனைத் தெரிவித்த கல்வி துணையமைச்சர் பி.கமலநாதன் மாணவர்களின் செய்கை மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகக் கூறினார்.
கமலநாதன் இன்னும் அந்த 15-நிமிட காணொளீயைப் பார்க்கவில்லை.
“அதைப் பற்றிக் கேள்விப்பட்டேன். விசாரணை மேற்கொள்வதற்காக விரைவில் அதைப் பார்க்க வேண்டும்”, என்றாரவர்.
சம்பவம் நிகழ்ந்த பள்ளியை அமைச்சால் அடையாளம் காணமுடியவில்லை என்று கூறிய அவர், தகவல் அறிந்தவர்கள் அமைச்சுக்கு உதவ முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இவன் எல்லாம் ஒரு துணை அமைச்சர் . துணைத்தலைவர் பதவிக்கு தேர்தலில் தோற்ற 36-ஒ4 மோகன், விக்கி , நெகிரியில் கவிழ்ந்த மோகன் எல்லாம் போடியிடுகிறார்கல் இவன் சும்மா பணம் பண்ண பார் க்கிறான்
வணக்கம்.அந்த காட்சியில் பள்ளிமாணவனின் சட்டையில் பள்ளி சின்னம் இருக்கிறது. அதை உங்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவில் கொடுத்தால் அவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள். அதற்கு பொது மக்கள் உதவியை கேட்டு தாமதிற்காதீர்கள். உடனே நடவடிக்கை கட்டாயம் அவசியம்.
இப்படி சொல்லியே காலத்தை ஒட்டிவிடு. அடுத்த போதுதேர்தளோடு நீ ஓடி விடுவாய். வெறும் வாய் சவடால் மட்டும் தான் உனக்கு தகுதி.மக்கள் பிரதிநிதிக்கு தகுதி இல்லாதவன் நீ வாய் மூடி அமைதியாய் இரு.
ஒரு நாடு வாழ,ஒரு கிராமத்தை இழக்கலாம்.ஒரு கிராமம் வாழ ஒரு குடும்பத்தை இழக்கலாம்.ஒரு குடும்பம் வாழ ஒருவரை இழக்கலாம்,இதுவே வுலக நியதி ஆனால் இன்று ஒருவர் வாழ குடும்பத்தை இழக்கிறார்,கிராமத்தை,நாட்டை இழக்க துணிந்து விட்டனர்.
இதுவே புதுமை,நாகரீகம்.கை கட்டி வேடிக்கை தான் பார்க்க முடிகிறது.குறிப்பிட்ட பள்ளி மாணவ/மாணவி அத்துமீறல் வீடியோவை பாரும், திராவிடம் எவ்வளவு தூரம் பாய்கிறான் என்று பார்போம்.
வாழ்க நாராயண நாமம்.
என்னத்தையா விசாரிக்க போகிறாய்? யானை போவது தெரியவில்லை
எலி போவதை பற்றி விரிக்கிறாய்!!!!!!. இது நமது கலாசாரத்தில் தவறில்லை. பொது இடத்தில் நடந்த இதை ஊதி பெரிதாக்கி அந்த சிறு பிள்ளைகளின் வாழ்க்கையை விணாக்கி விடாதே. உனக்கும் பிள்ளை குட்டி இருக்கு இல்லையா? என்ன தகப்பன் ஐயா நீர். இதை கூட புரிந்து கொள்ள முடியவில்லை எப்படி மந்திரி ஆனாய். உண்டு வயதுக்கு நீ சில நேரங்களில் சில மனிதர்கள் படம் பார்திருக்க வேண்டுமே? இல்லை என்றால் , பாரும். அல்லது நஜிப்புக்கு நீ நல்ல மந்திரி இந்தியர்களை மலாய் கலா ச்சா ரத்தில் இணைக்கிறேன் பார் என்று குஜா தூக்குகிறாயா?. படுத்துக்கொண்டு மேலே பார்து துப்பாதே. புரிகிறதா? மகா மந்திரி.
.
.
பிள்ளங்க்களே சொல்லி குறை இல்லை. பெத்தவணுங்க அதுங்க சின்ன புள்ளங்கே. எங்களுக்கும் அது தெரியுன்னு சொல்றப்போ தெரியவேணா, கோளாறு எங்கேன்னு?
எல்லாம் இன்றைய தொழிநுட்ப வளர்சியுப், மாணவர்களின் கொள்ளரான சிந்தனையும்தான் காரணம். பெற்றோர்கள் கண்ணில் ஒரு நொடியில் மண்ணை துவிட்டு அவங்க நெனச்சத சாதிக்கிறாங்க. இவங்கள சிறையில போட்டு கலி திங்க வச்சாதான் புத்தி வரும்.
தமிழ் படம் பாருங்க. உணர்ச்சி பொங்க நடிப்பார்கள். நம் இளையோர் அதைப் பார்த்து செயல் முறை பயிற்சி செய்கின்றார்கள். இப்படிச் சொன்னால், சினிமா பைத்தியங்கள் இல்லையென்று சத்தியமும் செய்வார்கள். தீக்குளிக்கவும் செய்வார்கள்.
அது யாருப்பா திராவிடம். அப்படி ஒரு இனம் இருக்கு?
ஏம்பா? கமலநாதன் வருகிறார்? மாணவர்கள் நமது இனமா?
mcmc இதுபோன்ற காட்சிகளை பதிவேற்றம் காணும்போதே தடுக்க வேண்டும்.
நமது பிள்ளைகளுக்கும் பொது இடங்களில் எப்படி நடக்க வேண்டும் என்று தெரியவில்லை.சமுதாயம் பற்றியோ பெற்றவர்களை பற்றியோ கவலையே இல்லாதவர்கள்.இவர்கள் மட்டும் இல்லை இன்னும் நிறைய பேர் இவர்களை போல் இருக்கிறார்கள்..பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இப்படி பெயர் வாங்கி கொடுக்காமல் இருந்தால் நன்று.
இயற்கை, காலம் , தொழிநுட்பம் இவற்றை அடக்க முடிய வில்லை……மிகுந்த போராட்டம் .
அறைக்குள் செய்ய வேண்டியதை அம்பலத்தில் செய்தால் பார்ப்போர் முகம் சுளிக்கத்தான் செய்வார்கள். பள்ளி உடையில் பல மாணவர்கள் முன்னிலையில் செய்வது தப்பென்று தெரிந்து செய்வார்களானால் இவர்களுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும். பள்ளி விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது பள்ளி நிருவாகம் மற்றும் கல்வி இலாக்க. எவன் செத்தாலும் எவன் பிறந்தாலும் கமலநாதன்தானா நம் கண்ணுக்குத் தெரியனும். பிற கல்வி அமைச்சர்கள் யார் என்று மக்கள் இன்னமும் அறியவில்லையா? கமலநாதன் அளவிற்கு, கல்வி அமைச்சருக்கு இன்னும் போதிய விளம்பரம் நம்மிடையே கிடைக்கவில்லை போலும்.
இதுபள்ளிவளாகத்தில் நடைபெற்றிருந்தால், அவர்கள் இருவரும் பள்ளியில்இருந்து நீக்கப்படுவது நிச்சயம். அதன்பிறகு ஒரு கூட்டம் அரசியல்லாபத்திற்காக‘ஐயோ, குய்யோ’ என்றுகூச்சல்போடும். இவர்களுக்கு எதிராக அந்தப் பள்ளி எடுக்கிற ஒழுக்க நடவடிக்கை எதுவானாலும் அதை நான் முழுமையாக ஆதரிப்பேன். படிக்க வேண்டிய வயதில் காதல்…. காதல் பண்ண வேண்டிய வயதில் கல்யாணம்…. கல்யாணம் பண்ண வேண்டிய வயதில் கர்ப்பம்… கர்ப்பமாக இருக்க வேண்டிய வயதில்‘சிங்கிள்மாதர்’…
“கலவி கல்வி” என்றொரு பாட திட்டத்தை அறிமுகம் செய்யலாமா என கல்வி துணை அமைச்சர் கமலநாதன் ஆராய்கிறறோ ?
கட்டொழுங்கு ஆசிரியரே கட்டொழுங்கை மீறுகிறார்! மாணவர்களுக்கு வழிகாட்டி பள்ளிகளின் ஆசிரியர்களே. அவர்களே காட்டாத காட்டெல்லாம் காட்டினால் மாணவர்களும் காட்டத்தான் செய்வார்கள்!