புவா 1எம்டிபி பற்றிப் பேசக் கூடாது: பிஏசி தலைவர் உத்தரவு

moreபெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  1எம்டிபி  பற்றிப்  பொது  இடங்களில்  பேசுவதை  நிறுத்திக்கொள்ள  வேண்டும்  எனப்  பொதுக்  கணக்குக்குழுத்  தலைவர்  ஹசான்  அரிப்பின்  கூறினார்.

டோனி  புவா  அருளுடன்  விவாதமிட  விரும்பினால்  பொதுக்  கணக்குக்குழு(பிஏசி)விலிருந்து  விலக  வேண்டும்  அல்லது  1எம்டிபி மீதான  விசாரணையில்  கலந்துகொள்வதைத்  தவிர்க்க  வேண்டும்  என்று  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  உத்தரவிட்டிருப்பதை  அவர்  சுட்டிக்காட்டினார்.

“மக்களவைத்  தலைவரின்  விதிப்படி  புவா  1எம்டிபி  பற்றிப் (பொதுவில்) பேசக்கூடாது”, என  ஹசான்  கூறினார்.

1எம்டிபி  பற்றி  அறிக்கைகள்  விடுப்பதும்  இதில்  அடங்கும்  என்றாரவர்.

இன்று  காலை தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்   சாலே சைட்  கெருவாக்  விவாதத்தை  வெள்ளிக்கிழமை  இரவு  9மணியிலிருந்து  10வரை  ஆர்டிஎம்மில்  வைத்துக்கொள்ளலாம்  எனக்  கூறியிருந்தார்.

அதன்பின்  பண்டிகார்  முன்சொன்ன  நிபந்தனைகளை  விதித்து  அவை  பின்பற்றப்படாவிட்டால்  மக்களவைத்  தலைவர்  பதவியிலிருந்து  தாம்  விலகப்போவதாகக்  கூறினார்.